குடும்ப தகராறில் தாய், கைக்குழந்தையுடன் தீக்குளிப்பு

111

சேலம் ஆத்தூர் அருகே குடும்ப தகராறில் தாய் கைக்குழந்தையுடன் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கிழக்கு ராஜபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ். ஆட்டோ டிரவைரான இவருக்கும், இவரது மனைவி செல்வப்பிரியாவுக்கும் 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. இந்நிலையில் செல்வபிரியாவுக்கும் அவரது தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த செல்வபிரியா தனது குழந்தையுடன் மண்ணெண்ணைய் ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் தீக்காயம் அடைந்த இரண்டு பேரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. செல்வப்பிரியா உயிருக்கு ஆபத்தான நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.