சேலம் திமுக முன்னாள் எம்பி வீட்டில் மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்குதல் | கார், இருச்சக்கர வாகனம் சேதம் …!

283

சேலம் திமுக முன்னாள் எம்பி செல்வகணபதி வீட்டில் மர்மநபர்கள் பெட்ரோல் வெடிகுண்டு வீசியது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலத்தில் திமுகவினரிடையே நிலவும் உட்கட்சி பூசல் காரணமாக, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் ஆதரவாளர்கள் 4பேர், காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சேலம் ராம்நகரில் உள்ள செல்வகணபதி வீட்டின்மீது, மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் வீட்டின் முன்பாக நிறுத்ப்பட்டிருந்த கார் மற்றும் இருச்சக்கரவாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.