அங்கன்வாடி மையத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு..!

96

சேலத்தில் அங்கன்வாடி மையத்தில் லஞ்சம் வாங்கிய அதிகாரி உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

சேலம் மாநகராட்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப் பணிகள் மூன்று பிரிவுகளாக இயங்கி வருகிறது. இதில் முதலாவது திட்டப் பணிகளுக்கு அதிகாரியாக பாலாம்பிகை பணியாற்றி வருகிறார். இவரின் கீழ் 133 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 25 அங்கன்வாடி மையங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு தலைமை நிர்வாக பணியாளராக நூர்ஜகான் பணியாற்றி வருகிறார்.

இவர் உணவு பொருட்கள் மற்றும் வாடகை வசூலிப்பதில் 50 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நூர்ஜகானிடம் சோதனை மேற்கொண்டதில், பாலாம்பிகைக்கு லஞ்சமாக தருவதற்காக வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட பாலாம்பிகை, சாந்தி, நூர்ஜகான் ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.