சேலம் மாநகரில் 12 பசுமை வெளி பூங்காக்கள் அமைப்பு..!

182

சேலம் மாநகரில் அமைக்கப்பட்டுள்ள 12 பசுமை வெளி பூங்காங்க்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சேலம் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களில் 5 கோடி ரூபாய் செலவில் 12 பசுமை வெளி பூங்காங்கக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். அம்மா பேட்டையில் அமைக்கப்பட்ட பூங்கா திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பொதுமக்கள் பயன்பாட்டுக்கான 3 சக்கர மின் கல வாகனங்களையும் வழங்கினார். மாவட்ட ஆட்சியர் ரோகினி தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் எம்.பி.பன்னீர் செல்வம், எம்.எல்.ஏ செம்மலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து பூங்காவில் அமைக்கப்பட்ட விளையாட்டு திடலில் முதல்வர் பழனிசாமி பேட்மிண்டன் விளையாடினார். பின்னர் நேரு கலையரங்கத்தில் நடைபெற்ற பிளாஸ்டிக் மாசில்லா விழிப்புணர்வு முகாமினை தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி, மாணவ, மாணவியருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதல்வர் பழனிசாமி, கல்வி தரம் உயர்த்தப்பட்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக கூறினார். கல்வி செல்வத்தை சம்பாபிப்பது மாணவர்களின் கடமை என்றும் கூறினார். இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முதலமைச்சர் பழனிசாமி, அனைத்து துறைகளிலும் தமிழகம் வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், பல்வேறு துறைகளில் தமிழக அரசு மத்திய அரசின் விருதை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார். முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதாக நிபுணர் குழு கூறியுள்ளதை தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி முல்லை பெரியாறு அணையில் நீர் தேக்கப்பட்டுள்ளதாகவும், கூறினார்.