2 தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து..!

245

சேலம் அருகே இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சேலம் மாவட்டம் மாமாங்கம் என்ற இடத்தில் இரண்டு தனியார் சொகுசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. சேலத்தில் இருந்து தருமபுரி சென்ற பேருந்தும், பெங்களூரில் இருந்து கேரளா சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதின. இதில் இரண்டு பெண்கள் உட்பட ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்த போலீசார் மீட்பு பணிகளில் ஈடுபட்டதுடன், விபத்து குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலையில் நிகழ்ந்த இந்த கோர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.