சேலம் அருகே டிராக்டர் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்..!

392

சேலம் அருகே டிராக்டர் மோதி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.ஓமலூர் அருகே உள்ள சக்கரசெட்டிபட்டியைச் சேர்ந்தவர் சின்னத் தங்கம். கணவரை இழந்து தனிமையில் வசித்து வரும் இவர், நாலுக்கால் பாலத்தை அடுத்த சக்தி மாரியம்மன் கோவில் அருகே சக பணியாளர்களுடன் தூய்மை பணியை மேற்கொண்டிருந்தார். அப்போது, தீவட்டிபட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த டிராக்டர் மோதியதில் சின்னத் தங்கம் மற்றும் யசோதா ஆகிய இருவரும் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சின்னத் தங்கம் உயிரிழந்தார். யசோதாவுக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.