ஓமலூர் அருகே ரயிலில் அடிபட்டு கூலித் தொழிலாளி உயிரிழப்பு தண்டவாளத்தை கடக்க முயன்றபோது நிகழ்ந்த விபரீதம்..!

401

ஓமலூர் அருகே ரயிலில் அடிப்பட்டு கூலித் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த சக்கரசெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். 38 வயதான இவர், சென்ட்ரிங் வேலை செய்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் உள்ள ரயில்வே கேட்டைத் தாண்டி, தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, சேலத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில் கண்ணன் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் பண்டிகையின்போது நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.