சேலம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னிவேன் மோதிய விபத்தில் கணவன் மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

166

சேலம் மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் ராகவன். இவர் தனது மனைவி சாரதாமணி மற்றும் உறவினர்களுடன் ஈரோடு சென்றுவிட்டு ஆம்னிவேனில் திரும்பி கொண்டிருந்தார். சங்ககிரி அருகே வரும் போது நின்று கொண்டிருந்த லாரி மீது திடீரென கட்டுப்பாட்டை இழந்த ஆம்னிவேன் வேகமாக மோதியது. இதில் ராகவன் மற்றும் அவரது மனைவி சாரதாமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 4 பேர் முதலுதவி சிகிச்சைக்காக சங்ககரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்தில் கணவன் – மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.