8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை..!

190

8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்கவுள்ள நிலையில், அந்த தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை திட்டம், சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாயில் அமைக்க மத்திய மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனையடுத்து, சேலத்தில் இருந்து அரூர் செல்லும் வழியில், முதல் கட்டமாக அடிமலை புதூர் பகுதியில் இருந்து சீரிக்காடு வரையிலான 8 கிலோ மீட்டர் தொலைவில், நில அளவீடு செய்யும் பணி இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்கு நில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தொடர்ந்து நிலத்தை அளவீடு செய்யும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். 8 வழி சாலைத் திட்டத்தால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு தொகையை அரசு உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.