சேலத்தில் 500 ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு நான்கு நூறு ரூபாய் நோட்டுக்களை வழங்கியவரை போலீசார் கைது செய்தனர்.

289

சேலத்தில் 500 ரூபாய் நோட்டை வாங்கிக் கொண்டு நான்கு நூறு ரூபாய் நோட்டுக்களை வழங்கியவரை போலீசார் கைது செய்தனர்.
நேற்றைய தினம் மத்திய அரசு 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்தது. இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கணேசன் என்பவர், 500 ரூபாய் நோட்டுக்களை பெற்றுக்கொண்டு நான்கு நூறு ரூபாய் நோட்டுக்களை வழங்கியுள்ளார். இது குறித்து தகவலறிந்த சேலம் டவுன் போலீசார் கணேசனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.