தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிக்காக துணை ராணுவப் படையினர் வருகை..!

58

மக்களவை தேர்தலையொட்டி சேலத்தில் பாதுகாப்பு பணிக்காக முதற்கட்டமாக 92 துணை ராணுவப் படை வீரர்கள் சென்றுள்ளனர்.

மக்களவை தேர்தல் நெருங்குவதால் பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க முதற்கட்டமாக 92 துணை ராணுவ படையினர் சேலத்திற்கு வந்தனர். அவர்களை காவல்துறை அதிகாரிகள் வரவேற்று இரும்பாலையில் உள்ள மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும், பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்த ஆலோசனை நடைபெற்று வருவதால் கூடுதல் துணை ராணுவ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.