சேலத்தில் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு : பொதுமக்கள் பீதி.

217

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால், பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரில் இன்று காலை 7. 48 மணிக்கு லேசான நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நில அதிர்வு சேலம் நகரம், ஓமலூர், மேட்டூர், மேச்சேரி, கன்னங்குறிச்சி, தீவட்டிபட்டி, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே ஏரியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. நில அதிர்வு சுமார் 2 நிமிடங்கள் வரை நீடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நில அதிர்வு ஏற்பட்டதை அடுத்து, பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர்.