தந்தையை படுகொலை செய்த மகன்

222

சங்ககிரி அருகே சொத்து தகராறில் தந்தையை மகனே கொன்றுவிட்டு தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் காளிப்பட்டி பிரிவு பகுதியில் வசித்து வந்தவர் சின்னசாமி. இவருக்கு சந்திரசேகர், ரமேஷ் என்ற இரு மகன்கள். இதில் மூத்த மகன் சந்திரசேகர் என்பவருக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். சொத்தை விற்றுத் தரும்படி கேட்டு தந்தைக்கு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டாவது மகன் ரமேஷ் இரவு வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது தந்தை கழுத்து அறுக்கப்பட்டு கொலையுண்டு கிடப்பதைக் கண்டு, போலீசாருக்கு தகவல் தந்தார். தனது அண்ணன் மீது சந்தேகம் இருப்பதாக ரமேஷ் கூறியதன் பேரில் சங்ககிரி போலீஸார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சந்திரசேகரை தேடி வருகின்றனர்.