நாட்டில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் – மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி….

245

நாட்டில் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் இளைஞர்கள் என மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இது குறித்து பேசிய அவர், நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளின் போது உயிரிழப்பவர்களில் 65 சதவீதம் பேர் 18-வயது முதல் 35 வயது வயதுடையவர்கள் என தெரிவித்துள்ளார்.தேசிய நெடுஞ்சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய அவர், அவற்றை சரிசெய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.மது குடித்துவிட்டும், செல்போனில் பேசிக்கொண்டும் வாகனங்களை ஓட்டுவதால் அதிகமான வாகன விபத்துகள் ஏற்படுவதாக அவர் கூறினார்.வாகன விபத்துக்கள தவிர்க்க பொதுமக்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.