தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சஜாக் ஆபரேஷன் என்ற ஒத்திகை பணியை தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்..!

82

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க சஜாக் ஆபரேஷன் என்ற ஒத்திகை பணியை தமிழக கடலோர பாதுகாப்பு படையினர் மேற்கொண்டனர்.

கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க, ஆம்லா ஆப்ரேஷன் போன்ற பல கண்காணிப்பு பணிகளை கடலோர காவல்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையும், தமிழக கடலோர பாதுகாப்பு படையும் இணைந்து சஜாக் என்ற ஆபரேஷனை மேற்கொண்டனர். ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரையிலான கடல் பகுதிகளில் காலை 7 மணியில் இருந்து மாலை 5 மணி வரை ஒத்திகை பணி நடைபெற்றது. கடலில் சந்தேகம்படும்படி யாராவது படகில் சென்றால், கடலோர காவல்துறையினருக்கு தகவல் அளிக்க வேண்டும் என மீனவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.