இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா மீண்டும் கோபிசந்தின் அகாடமியில் சேர்ந்தார்.!

429

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான சாய்னா நேவால் தற்போதைய பயிற்சியாளர் விமல்குமாரிடமிருந்து விலகி, கோபிசந்திடம் மீண்டும் பயிற்சி பெற உள்ளார்.
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் சாய்னா நேவால் தோல்வியடைந்தார். மேலும் கடந்த முறை நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே சமயம் கோபிசந்திடம் பயிற்சி பெற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி. சிந்து வெள்ளி பதக்கம் வென்றார். இதையடுத்து, 2014ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் பெங்களூரில் விமல் குமாரிடம் பயிற்சி பெற்றுவந்த சாய்னா, தற்போது ஐதராபாத்தில் கோபிசந்திடம் பயிற்சி பெற முடிவெடுத்துள்ளார். இது பேட்மிண்டன் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சாய்னாவின் இந்த முடிவை தான் வரவேற்பதாகவும், அவர் மேலும் நன்றாக விளையாட உதவுவேன் என கோபிசந்த் தெரிவித்துள்ளார்.