இயற்கை வளங்கள் நமது தேசத்தின் சொத்து அதை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.

245

இயற்கை வளங்கள் நமது தேசத்தின் சொத்து அதை நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் தமிழக பெண்கள் செயற்கலத்தின் 10ம் ஆண்டு தமிழக பண்பாட்டு கண்காட்சியை ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் துவக்கி வைத்தார். தமிழர்களின் பண்பாடு மற்றும் வரலாறு, பழைய கால இசைக்கருவிகள், இயற்கை வளங்கள் உள்ளிட்டவை இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. அப்போது பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், சமூகம் எழுச்சி பெற வேண்டும் என்றால் வரலாற்றை பற்றி அறிந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த கண்காட்சி வரலாறு அறியத்தக்க வகையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற கண்காட்சிகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்றார்.