குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதி | மத்திய உளவுத்துறை எச்சரிக்கை !

137

குடியரசு தின விழா கொண்டாட்டங்களின்போது, தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதால் விமான நிலையங்களில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு உளவுத்துறை எச்சரித்துள்ளது.
வரும் 26-ம் தேதி நாடு முழுவதும் குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. டெல்லி மற்றும் அனைத்து மாநிலங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் பல பகுதிகளிலுள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பயணிகளும், அவர்களின் உடமைகளும் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்திலும், வெளிநாட்டு விமான நிலையத்திலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.