கம்பம் அருகே உள்ள முல்லை பெரியாற்றின் கரையோரத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் கண்டெடுப்பு.

149

முல்லை பெரியாற்றின் கரையோரத்தில் 80 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவர் சடலம்கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள முல்லை பெரியாற்றின் கரையோரத்தில் 80 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத முதியவரின் சடலம் கிடப்பதாக அவ்வழியாக சென்ற அப்பகுதி மக்கள் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து இராயப்பன்பட்டி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.