இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம்

105

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்துள்ளது என்று தெண்டுல்கர் மற்றும் கவாஸ்கர் புகழாரம் சூட்டியுள்ளனர்.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் இந்திய அணி புதிய வரலாறு படைத்தது. இதுகுறித்து முன்னாள் கேப்டன் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவிக்கையில், ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி புதிய சகாப்தம் படைத்ததாக புகழாரம் சூட்டினார். இதேபோல் இந்திய அணி வீரர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ள சுனில் கவாஸ்கர், 72 ஆண்டு கால வரலாற்றில் புதிய சரித்திரத்தை வீராட்கோலி படைத்தார் என்றும், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டன் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார் எனவும் குறிப்பிட்டார்.