சபரிமலையில் பெண்களைஅனுமதிக்கலாமா?அரசியல் சாசன அமர்வுக்குமாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு!

212

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கில், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலைக்கு, ஆண்டுதோறும் தமிழகம் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்காக பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவிலில், நெடுங்காலமாக பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், 10 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசிக்க, பெண்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் முடிவை அறிவிக்காமல் நிறுத்தி வைத்திருந்த உச்சநீதிமன்றம், அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இன்று உத்தரவிட்டது.