சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு தடை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் …!

389

சபரிமலையில் பெண்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பபட்டுள்ளது.
கேரளாவில் புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் பத்து வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நம்பூதிரி பரமேஸ்வரன் என்பவர் சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்த பிரச்சனையை பெண்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் என்பதால் நீதிபதிகள் அமர்வில் 50 சதவீத பெண் நீதிபதிகளை நியமிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு நடுவர்களாக உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்றங்களின் ஒய்வு பெற்ற நீதிபதிகள், வரலாற்று ஆய்வாளர்கள் நியமிக்கவேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.