சபரிமலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சம் !

693

சபரிமலையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஒகி புயல் காரணமாக கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் கன மழை பெய்து வருகிறது. சபரிமலையிலும் பலத்த காற்றுடன் கன மழைக் கொட்டி வருகின்றன. இதனால் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன. இந்நிலையில் தொடர் மழையின் காரணாமாக சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கும்படி கேரள மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. தற்காலிக கூடாரம் அமைத்து தங்கியிருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.