சபரிமலையில் மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு குவிந்துள்ளனர்.

187

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று மாலை நடைபெற உள்ளது. இதன்படி, மகர சங்கரம பூஜை நடைபெறுதை முன்னிட்டு 18ம் படிகளில் ஏற பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பகல் 1 மணிக்கு நடை சாத்தப்பட்டு, பின்னர் மாலை தீபாராதனை முடிந்து மகர ஜோதி தெரிந்த பிறகே பக்தர்களுக்கு அனுமதிப்படுவார்கள். சாஸ்தா கோயிலில் இருந்து கொண்டு வரப்படும் திருவாபரணம், இன்று மாலை ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து பொன்னம்பலமேட்டில் ஜோதி வடிவில் ஐயப்பன் காட்சியளிப்பார். எனவே, மகரஜோதி தரிசனத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துள்ளனர்.