அய்யப்பன் கோவிலுக்குள் ஆர்ப்பரித்து செல்லும் மழை வெள்ளம்..!

1191

சபரி மலை அய்யப்பன் கோவிலுக்குள் பம்பை ஆற்றின் வெள்ள நீர் புகுந்ததால் கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது.

தென் மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கேரள மாநிலம் தண்ணீரில் தத்தளிக்கிறது. மாநிலம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் சபரிமலை அய்யப்பன் கோவிலை ஒட்டிய பம்பை ஆற்றில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் வெள்ள நீர் சூழ்ந்து ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக கோவில் நடை சாத்தப்பட்டுள்ளது. இதனால் அய்யப்பன் பக்தர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.