சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி இன்று முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டார்!

687

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு புதிய மேல்சாந்தி இன்று முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை கார்த்திகை முதல் தேதி தொடங்க உள்ளது. இன்று அதிகாலை சபரிமலை நடை திறந்ததும், ஐயப்பனுக்கு நெய் தீபாராதனை காட்டப்பட்டது. இதைத்தொடர்ந்து புதிய மேல்சாந்தி தேர்வு நடைபெற்றது. பாரம்பரிய முறைப்படி குலுக்கல் மூலம் புதிய மேல்சாந்தி தேர்வு செய்யப்பட்டார். அதன்படி, சபரிமலை மேல்சாந்தியாக உன்னிகிருஷ்ணன் நம்பூதிரியும், மாளிகைபுரம் மேல்சாந்தியாக அன்னீஸ் நம்பூதிரியும் தேர்வு செய்யப்பட்டனர். உன்னிகிருஷ்ணன் கார்த்திகை ஒன்றாம் தேதி முதல் ஒரு ஆண்டு காலத்துக்கு சபரிமலையில் தங்கி பூஜை செய்வார்.