சபரிமலை கோவிலுக்கு படிபூஜை செய்வதற்கு 2033 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்து விட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

326

சபரிமலை கோவிலுக்கு படிபூஜை செய்வதற்கு 2033 ஆம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்து விட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் படி பூஜை, 18 படிகளிலும் உள்ள மலை தேவதைகளை திருப்திபடுத்தும் வகையில் நடைபெறுகிறது. இந்த படிபூஜையின் போது 18 படிகளிலும் பட்டு விரித்து அதில் தேங்காய், பூக்கள் வைக்கப்பட்டு, குத்து விளக்கேற்றி வைத்து ஒருமணி நேரம் பூஜை நடத்தப்படும். இதனைத் தொடர்ந்து அனைத்து படிகளிலும் நிவேத்யம், தீபாராதனை நடத்தி, பூஜையை நிறைவு செய்வர். இதற்காக 75 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு, 2033-ம் ஆண்டு வரை முடிந்து விட்டதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்கள் 18 ஆண்டுகள் வரை காத்திருந்து, படி பூஜை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.