தமிழக அரசு மீது குறை சொல்ல தகுதி கிடையாது : துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கமல்ஹாசன் மீது சாடல்

309

தமிழக அரசு மீது குறை கூறுவதற்கு நடிகர் கமல்ஹாசனுக்கு எந்த அருகதையும் இல்லை என்று துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் சாடியுள்ளார்.
கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவின் எண்ணப்படியே நடிகர் கமல்ஹாசன் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். வரி விதிப்பின் மூலமாகவே மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் திரைப்படங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பை கமல்ஹாசன் எதிர்ப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். திரையங்குகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து கமலஹாசன் மௌமாக இருப்பதாக குற்றம் சாட்டிய பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்களின் முகவரிகள் இணையதளங்களில் அழிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.