மழை குறுக்கிட்டதால் தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டு

134

மழை குறுக்கிட்டதால் தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டு, இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.

12-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 15-வது லீக் ஆட்டம், சவுதாம்ப்டனில் தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்கா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, தொடக்கத்தில் இருந்தே தடுமாற்றத்துடன் விளையாடியது. 7 புள்ளி 3 ஓவர்களில் 29 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா அணி தத்தளித்தது.

இந்நிலையில் மழை குறுக்கிட்டதால் கிரிக்கெட் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி ரத்து செய்யப்பட்டது என நடுவர்கள் அறிவித்தனர். எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. இதனால் தமது முதல் புள்ளியை பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி, இனிவரும் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி போட்டியில் பங்கேற்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.