ரஷ்யாவில் நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி முன்னேறியுள்ளது.

246

ரஷ்யாவில் நடைபெற்று வரும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப் போட்டிக்கு இந்தியாவின் லியாண்டர் பயஸ் ஜோடி முன்னேறியுள்ளது.
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஓபன் டென்னிஸ் தொடர் ரஷ்யாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ்-ஜெர்மனியின் ஆண்ட்ரே பெக்மான் ஜோடி, ரஷ்யாவின் மிகைல் எல்ஜின்-அலெக்சாண்டர் குட்ரியவட்சவ் ஜோடியை எதிர்கொண்டது. இந்த போட்டியில், 6-3, 7-6 என்ற நேர் செட்டில் பயஸ் ஜோடி வெற்றி பெற்றது. இறுதிப்போட்டியில் பயஸ் ஜோடி, பிரிட்டனின் டொமினிக் இங்லாட்-பின்லாந்தின் ஹென்றி கோட்டியன் ஜோடியை எதிர்கொள்கிறது.