ரஷ்ய நாட்டில் கடும் பனிப்பொழிவு நீடிப்பதால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது!

155

ரஷ்ய நாட்டில் கடும் பனிப்பொழிவு நீடிப்பதால், இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் குளிர் காலம் நிலவி வரும் நிலையில் ரஷ்யாவில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் தங்கள் அன்றாட செயல்பாடுகளை மேற்கொள்வதில் சிரமம் அடைந்து வருகின்றனர். சாலைகளில் பனிக்குவியல்கள் காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அடர் பனி காரணமாக காற்றில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து காணப்படுவதால், கார்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.