சர்வதேச உஷூ சாம்பியன்ஷிப் போட்டி : இந்திய வீராங்கனை பூஜா கடியன் தங்கம் வென்று சாதனை.

280

ரஷியாவில் நடைபெற்று வரும் சர்வதேச உஷூ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் பூஜா கடியன் முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

ரஷ்யாவின் கஸான் நகரில் 14-வது சர்வதேச உஷூ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. போட்டியின் 75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை பூஜா கடியன், ரஷியாவின் எவ்ஜெனியா ஸ்டெப்பனோவாவை எதிர்கொண்டார். இதில் எவ்ஜெனியா ஸ்டெப்பனோவாவை வீழ்த்தி பூஜா கடியன் இந்தியாவுக்கு முதன்முறையாக தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.உஷூ போட்டி மரபார்ந்த சீன சண்டை கலைகளை அடிப்படையாக கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு என்பது குறிப்பிடத்தக்கது.