ரஷியாவில் வணிக வளாகத்தில் பயங்கர குண்டு வெடிப்பு!

1499

ரஷியாவில் வணிக வளாகத்தில் நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பெர்க் நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்று மக்கள் கூட்டத்துடன் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த வணிக வளாகத்தில் வெடிகுண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் சிக்கி 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டனர். இந்த குண்டு வெடிப்பில், உயிரிழப்புகள் ஏதும் இல்லை என அந்நாட்டு போலீசார் கூறியுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.