இருநாட்டு உறவுக்காக சிறப்பான சேவை செய்ததற்காக மோடிக்கு விருது..!

134

பிரதமர் மோடிக்கு ரஷ்ய நாட்டின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவும் ரஷ்யாவும் நீண்ட காலமாக நட்பு பாராட்டி வருகின்றன. மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இந்த உறவு மேலும் வலுபடுத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இருநாட்டு உறவுக்காக சிறப்பான சேவையாற்றிய பிரதமர் மோடியை பாராட்டி, தனது நாட்டின் மிகப்பெரிய உயரிய விருதை வழங்குவதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. ஆர்டர் ஆப் செயின்ட் ஆன்ட்ரூ தி அபோஸ்தல் என்ற இந்த உயரிய விருது, ரஷ்யாவின் பெருமைக்குரியதாகும். இந்த விருது தனக்கு வழங்கப்பட்டதற்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இருநாட்டு உறவுகள் மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.