ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 71 பேர் பலியாகினர்..!

883

ரஷ்யாவில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 71 பேர் பலியாகினர். மாஸ்கோவில் இருந்து Antonov An-148 ரக விமானம் 65 பயணிகள், ஆறு ஊழியர்களுடன் ஓர்க்ஸ் நகருக்கு புறப்பட்டுச் சென்றது. கிளம்பிச் சென்ற சில நிமிடங்களில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், மீட்பு படையின் உதவியை நாடினர். இந்தநிலையில், Argunovo கிராமம் அருகே விமானம் நொறுங்கி விழுந்ததை உள்ளூர் மக்கள் உறுதி செய்தனர். இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 71 பேர் உயிரிழந்து விட்டதாக ரஷ்ய அரசு உறுதி செய்துள்ளது. கடும் பனிப்பொழிவு, மோசமான வானிலை காரணமாக விமானம் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.