அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு. ஹிலாரி கிளிண்டன் குற்றச்சாட்டு.

226

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு உள்ளது என ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 8-ந் தேதி நடக்கிறது. ஓட்டுப்பதிவுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது.
ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்பும் கடும் போட்டியில் உள்ளனர்.
இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகள் பெரும்பாலும் ஹிலாரிக்கு சாதகமாக அமைந்துள்ளன. இந்த நிலையில், தனது புதிய பிரசார விமானத்தில் பயணம் செய்தவாறு, ஹிலாரி நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது, அமெரிக்க ஊடகங்கள் பலவும், அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருப்பது குறித்து, உள்நாட்டு புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன எனவும், இது நம்பகமான தகவல்கள்தான் எனவும் குறிப்பிட்டார்.