சிறிய தொகை வைத்து ரம்மி விளையாடுவது சூதாட்டம் ஆகாது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து..!

608

சிறிய தொகை வைத்து ரம்மி விளையாடுவது சூதாட்டம் ஆகாது என டெல்லி உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லியில் இயங்கி வரும் தனியார் கேளிக்கை விடுதியில், சூதாட்டம் நடப்பதாக கூறி, அங்குள்ள நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கேளிக்கை விடுதியில் சிறிய அளவிலான தொகை வைத்து ரம்மி விளையாடுவது குற்றமல்ல என்று கூறியதுடன், பொய் வழக்கு தொடர்ந்ததாக சுரேஷ் குமாருக்கு 3 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய உத்தரவு சரியானது தான் என்று கருத்து தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார்.