ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை உணர்ந்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

256

ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை உணர்ந்து இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அதிரடி அறிவிப்பு யாகத்தை போன்றது என்று குறிப்பிட்டுள்ளார். ரூபாய் நோட்டு விவகாரத்தால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை உணர்ந்து இருப்பதாகவும், தற்காலிக துன்பம், நீண்ட கால பயனை அளிக்கும் என்று அவர் உறுதியளித்துள்ளார். கருப்பு பணம், ஊழல், தீவிரவாதத்துக்கு எதிராக நடைபெறும் போரில் பங்கேற்று ஒத்துழைப்பு அளித்து வரும் மக்களுக்கு தனது வீர வணக்கத்தை செலுத்துவதாக மோடி தெரிவித்துள்ளார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கை விவசாயிகள், வர்த்தகர்கள், தொழிலாளர்களுக்கு பலனளித்து வருவதாக கூறியுள்ள அவர், நாட்டின் முதுகெலும்பாக திகழும் பொருளாதார வளர்ச்சிக்கு இது உதவியாக இருக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மின்னணு பண பரிமாற்றம் மூலம், கருப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.