ரோகிங்யா மக்களால் தேச பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தல்-ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத்!

314

ரோஹிங்யா மக்களால் தேச பாதுக்காப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதாக, ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
மியான்மரில் குடியுரிமை மறுக்கப்பட்டதால் ரோஹிங்யா இஸ்லாமிய மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறி வங்க தேசம் மற்றும் இந்தியாவில் அகதிகளாக குடியேறி உள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மோகன் பகவத், வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறுபவர்களால் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு வருவதாக கூறினார். இப்போது ஊடுருவியுள்ளன ரோஹிங்யா மக்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்று அவர் எச்சரித்தார். இது குறித்து முடிவு எடுக்கும் முன்னர், மத்திய அரசு தேச பாதுகாப்பை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மோகன் பகவத் கேட்டுக் கொண்டார்.