முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

165

முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி நேரில் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி உறையூரில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி, முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசியதாகக்கூறப்படுகிறது. இதையடுத்து, அரசு வழக்கறிஞர் அசோகன், ஆர்.எஸ்.பாரதி மீது திருச்சி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத்தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரகுரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவதூறு வழக்குத்தொடர்பாக ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதி ஆர்.எஸ்.பாரதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.