ரூ.1000 சர்க்கரை கார்டு தாரர்களுக்கு வழங்க அனுமதி

106

சர்க்கரை கார்டு தாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கேவியட் மனுவும் தாக்கல் செய்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆயிரம் ரூபாய் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த 7-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பொங்கல் பரிசு வழங்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.இதனிடையே, சர்க்கரை பெறும் அட்டைத்தாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்குவதில் விதிவிலக்கு அளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சர்க்கரை கார்டு தாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கலாம் என உத்தரவிட்டனர்.மேலும் இலவச திட்டங்களை செயல்படுத்தும் போது, பயனாளிகளை வரையறுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர் இலவச திட்டங்களை அனைவருக்கும் வழங்கக் கூடாது என முடிவு எடுக்க உத்தரவிட்ட நீதிபதிகள், இன்னும் எத்தனை காலம் தான் இலவச வழங்க போகீறீர்கள் என வினா எழுப்பினர்.அனைவருக்கும் வங்கி கணக்கு உள்ள நிலையில், பொங்கல் பரிசு வாங்க 10 மணி நேரம் காக்க வைப்பது ஏன் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.உயர்நீதிமன்ற அனுமதியையடுத்து, தமிழக அரசு இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.