கர்நாடகா சட்டபேரவையில் காங். பலம் 79ஆக அதிகரிப்பு..!

309

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் சட்டமன்ற தொகுதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் அபாரமாக வெற்றிபெற்றுள்ளார்.

வாக்காளர் அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்ட பெங்களூரு ஆர்.ஆர்.நகர் தொகுதிக்கான வாக்கு பதிவு கடந்த 28ஆம் தேதி நடைபெற்றது. சட்டபேரவையில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தாலும் இந்த தொகுதியில் தனித்தே களம் கண்டனர். இந்நிலையில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி காங்கிரஸ் வேட்பாளர் முனிரத்தினா 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் முனிராஜு கவுடாவை பின்னுக்கு தள்ளி அபாரமாக வெற்றி பெற்றார். அதேசமயம் மஜத வேட்பாளர் ராமச்சந்திரா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதன் மூலம் கர்நாடகா சட்டபேரவையில் காங்கிரஸின் பலம் 79ஆக அதிகரித்துள்ளது.