இன்றைய ஐபிஎல் போட்டி : ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.

558

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது.
இன்று நடைபெறும் ஐபிஎல் லீக் போட்டியில் 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. 3 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 2 வெற்றிகள் 1 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 4 வது இடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் விளையாடியுள்ள ராஜஸ்தான் அணி 2 வெற்றிகள் 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளை பெற்று 5 வது இடத்தில் உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழர்கள் நடத்திய போராட்டத்தால் சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு மாற்றப்பட்டன. அதன் அடிப்படையில் இன்று நடைபெறும் இந்த போட்டி புனேவில் நடைபெறுகிறது. புனேவிலும் வறட்சி அதிகரித்துள்ள நிலையில், அங்கு நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.