100 ரவுடிகளுடன் பிறந்த நாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு கைது..!

484

ஜாமீனில் வெளிவந்த பிரபல ரவுடி பினு மீண்டும் தலைமறைவாகி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பூந்தமல்லி அருகே மலையம்பாக்கத்தில் உள்ள லாரி செட்டில் பிரபல ரவுடி பினு, தனது பிறந்த நாளை 100-க்கும் மேற்பட்ட ரவுடிகளுடன் கொண்டாடினார். இதுதொடர்பாக தகவல் கிடைத்த போலீசார், சம்பவ இடத்தில் 75 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். அப்போது, ரவுடி கும்பலின் தலைவர் பினு, மற்றும் அவரது கூட்டாளிகள் சிலர் தப்பி ஓடிய நிலையில், போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை கைது செய்தனர்.

வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட ரவுடி பினு, ஜூன் 23–ம் தேதி திருப்பெரும்புதூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைத்­தது. மாங்­காடு காவல் நிலை­யத்­தில் தினமும் ஆஜராகி கையெ­ழுத்து போடும் படி நீதிபதி உத்தரவிட்ட நிலையில், இதுவரை அவர் கையெழுத்து போடவில்லை. இதனால் சந்கேமடைந்த போலீசார், பினுவின் முன்ஜாமீன் மனுவை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளனர். ரவுடி பினு மீண்டும் தலைமறைவாகி உள்ளதால், அவருடைய ஜாமீன் மனுவை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.