தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல ரவுடி கைது..!

253

சென்னை திருவொற்றியூரில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பிரபல ரவுடியை காவல்துறையினர் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.

சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் தொடர் வழிப்பறி மற்றும் கொள்ளையில் ஈடுபட்டு வந்தவர் லோகநாதன். கீரை பிரபு எனும் பெயர் கொண்ட இந்த ரவுடி மாட்டுமந்தை மேம்பாலம் அருகே வழிப்பறியில் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் துப்பாக்கி முனையில் ரவுடி கீரை பிரபுவை சுற்றுவளைத்து கைது செய்தனர். விசாரணையில் மூன்று கொலை வழக்குகள் கீரை பிரபுவின் மீது நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.