சிவகங்கை அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் பிரபல ரவுடி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

108

சிவகங்கை அருகே காவல்துறையினர் நடத்திய என்கவுண்டரில் பிரபல ரவுடி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மதுரை, சிவகங்கை மாவட்டங்களில் 30க்கும் அதிகமான கொலை மற்றும் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தவர் பிரபல ரவுடி கார்த்திகை சாமி. மதுரை பெட்ரோல் பங்கில் கொள்ளையடித்து விட்டு காவல்துறையினரின் கண்ணில் மண்ணை தூவி தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்தார்.
கார்த்திகை சாமியை பிடிக்க காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில், சிவகங்கை அருகே நண்பர்களுடன் காரில் அவர் தப்பிச்செல்வதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்த காவலர்கள் அவரை பிடிக்க முயன்றனர்.
அவர்களை அரிவாளால் வெட்டிவிட்டு கார்த்திகை சாமி தப்பியோட முயன்றார். தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில், கார்த்திகை சாமி உயிரிழந்தார். என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.