நான் எனது கடமையை செய்துள்ளேன்-கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா!

864

மான நஷ்ட வழக்கு நோட்டீசை எதிர்கொள்வேன் என்று கர்நாடக சிறைத்துறை முன்னாள் டி.ஐ.ஜி. ரூபா தெரிவித்துள்ளார்.
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் வழங்க சிறைத்துறை டி.ஜி.பியாக இருந்த சத்யநாராயண ராவ் 2 கோடி லஞ்சம் பெற்றதாக ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததாக ரூபா மீது பெங்களூரு நீதிமன்றத்தில் சத்யநாராயண ராவ் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்தநிலையில், மான நஷ்ட வழக்கை எதிர்கொள்வேன் என்று ரூபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தான் எதையும் மறைக்கவில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.