வேர்புழுக்கள் மற்றும் மாவுப் பூச்சிகளின் தாக்கத்தால், மலைப்பூண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக, கொடைக்கானல் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

193

வேர்புழுக்கள் மற்றும் மாவுப் பூச்சிகளின் தாக்கத்தால், மலைப்பூண்டு விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாக, கொடைக்கானல் விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களான பூம்புகார், மன்னவனூர், கவுஞ்சி, கிளாவரை, குண்டுப்பட்டி, கீழானவயல், கும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மலைப்பூண்டு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. பரவலாக பெய்த மழையால், சுமார் 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மலைப் பூண்டுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தற்போது முளைத்துள்ள பூண்டுச் செடிகளில் வேர் புழுக்களின் தாக்கத்தினால், செடிகள் அழுகி வருகின்றன. பூச்சிக் கொல்லி மருந்து அடித்தாலும் வேர்புழுக்கள் அழிவதில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால், மலைக்கிராம பூண்டு விவசாயிகளின் எதிர்காலம் கேள்வி குறியாக உள்ளது.