ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் சிக்சர் அடிப்பதில் புதிய சாதனை படைக்க வாய்ப்பு..!

244

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் சிக்சர் அடிப்பதில் புதிய சாதனை படைக்க காத்திருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தொடரில் பங்கேற்க அமெரிக்கா சென்றுள்ளது. 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. டி20 கிரிக்கெட் ரோகித் சர்மா இதுவரை 102 சிக்சர்கள் விளாசி, அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். இந்த வரிசையில் வெஸ்ட் இண்டீஸின் கிறிஸ் கெய்ல் 105 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மார்டின் கப்டில் 103 சிக்சர்களுடன் 2வது இடத்தில் உள்ளார். இந்நிலையில் ரோகித் சர்மா இன்னும் 4 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் டி20 போட்டிகளில் அதிக சிக்சர் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. அவரது வாய்ப்புக்கு ஏற்றவாறு, கிறிஸ் கெய்ல் இந்த தொடரில் ஓய்வில் உள்ளார்.