14 வது ஆசிய கோப்பை தொடர் இன்று தொடக்கம் : 19ம் தேதி பாகிஸ்தான், இந்தியா மோதல்

1694

பாகிஸ்தானை மட்டும் அல்லாமல், ஆசிய கோப்பையும் வெல்லுவோம் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங் காங் அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறுகிறது. இன்று தொடங்க உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை, வங்கதேச அணிகள் பலபரீட்சை நடத்துகின்றன. இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி களமிரங்குகிறது. 18ம் தேதி ஹாங்காங் அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி மறுநாளே பலம் கொண்ட பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது.

இந்தநிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரோகித் சர்மா, பாகிஸ்தானுடன் விளையாடுவது சுவரஸியமான போட்டியாக இருக்கும் என கூறினார். அந்த ஒரு போட்டியை மட்டும் இலக்காக எண்ணாமல், அனைத்து போட்டியிலும் கவனம் செலுத்தி ஆசிய கோப்பையை இந்திய அணி கைப்பற்றும் எனவும் அவர் தெரிவித்தார்.